×

கார் மோதியதில் ஒரு மாதம் முன் முறிந்த மின் கம்பம்: முறிந்த கம்பத்தில் மின்சாரம் துண்டிக்கப்படாததால் அபாயம்

வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே ஒரு மாதம் முன்பு கார் மோதி முறிந்த மின்கம்பத்தில் மின்சாரம் துண்டிக்கப்படாததால் அருகில் குடிநீர் பிடிக்கும் குழந்தைகள் மற்றும் பெண்கள் அபாயத்தில் உள்ளனர். வேடசந்தூர் தாலுக்கா தெட்டம்பட்டி அருகே செல்லும் திண்டுக்கல் – குஜிலியம்பாளையம் சாலை ஓரத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கார் மோதியதில் ஒரு மின்கம்பம் முறிந்தது.ஆனால் இதுவரையில் அந்த மின்கம்பமும் மாற்றப்படவில்லை. மின் விநியோகமும் நிறுத்தப்படவில்லை. முறிந்த மின் கம்பத்தின் அருகே காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் செல்வதால் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் அதில் தண்ணீட் பிடிக்கின்றனர். முறிந்த கம்பத்தின் மின் ஒயர் பச்சை மரத்தின் கிளையின் உரசி கொண்டு செல்வதால் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே மின்வாரிய அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் முறிந்த மின்கம்பத்தை சீர் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த இடிந்த மின்கம்பத்தை சீர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோவிலூர் மின் விநியோக பிரிவு அதிகாரிகள் மற்றும் குளத்தூர் மின்வாரிய அதிகாரிகளிடமும் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். எனினும் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்….

The post கார் மோதியதில் ஒரு மாதம் முன் முறிந்த மின் கம்பம்: முறிந்த கம்பத்தில் மின்சாரம் துண்டிக்கப்படாததால் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Vedasanthur ,Vedasantur ,Dinakaran ,
× RELATED ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1.54 கோடி பறிமுதல்