×

ஸ்ரீதேவி இடத்தில் பாயல் ராஜ்புத்

இந்தியில் அறிமுகமானாலும், தெலுங்கில் வெளியான ‘ஆர்எக்ஸ் 100’, ‘மங்களவாரம்’ ஆகிய படங்களின் மூலம் தென்னிந்தியாவில் பிரபலமானவர், பாயல் ராஜ்புத். தமிழில் விநய் ராய் ஜோடியாக ‘இருவர் உள்ளம்’ என்ற படத்தில் நடித்தார். இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. தற்போது ‘கோல்மால்’, ‘ஏஞ்சல்’, ‘லீடர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், ‘சென்னைக்கு மீண்டும் வருவதில் அதிக மகிழ்ச்சி. தமிழ் மக்களின் அன்பும், உணவு வகைகளில் இட்லி, தோசை, சாம்பார், வத்தக்குழம்பு ஆகியவையும் எனக்கு பிடிக்கும்.

இங்குள்ள மக்கள் சினிமா மீது வைத்துள்ள பாசம் என்னை பிரமிக்க வைக்கிறது. இது சாதாரண மேடை அல்ல. இதை நான் ஒரு புனிதமான இடமாக நினைக்கிறேன். ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி உள்பட சாதனைகள் படைத்த லெஜண்ட்ரி நடிகர், நடிகைகளை உருவாக்கிய இடம் இது. இதுபோன்ற ஒரு இடத்தில் நானும் இருப்பதை நினைத்து மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறேன்’ என்றார்.

Tags : Payal Rajput ,Sridevi ,South India ,Vinay Roy ,Chennai ,
× RELATED சமந்தாவின் ஹெல்த் டிப்ஸ்