×

விடிந்தால் திருமணம்; மண்டபத்தில் இருந்த மணப்பெண் ஓட்டம்: மணமகன், பெற்றோர் அதிர்ச்சி

திருமலை: ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், என்.பி. குண்டாவை சேர்ந்தவர்கள் சிவய்யா-காந்தம்மாள் தம்பதி. இவர்களது மகன் ராமாஞ்சுலு. இவர் கர்நாடக மாநிலம் ஹோஸ்பேட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். சித்தூர் மாவட்டம், புருஜுபல்லேயைச் சேர்ந்தவர்கள் பிரகலாதன்-லட்சுமிதேவி தம்பதி. இவர்களது மகள் குமாரி.ராமாஞ்சுலுவுக்கும், குமாரிக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி, திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதையடுத்து மதனப்பள்ளியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  ராமாஞ்சுலு-குமாரி திருமணம் நேற்று நடைபெற இருந்தது. இதனால் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் மண்டபத்திற்கு வந்திருந்தனர். மணப்பெண் குமாரியை அவரது குடும்பத்தினர், உறவினர்கள் நேற்று முன்தினம் மாலை திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தனர். அதேபோல், மணமகன் வீட்டாரும் திருமண மண்டபத்திற்கு வந்தனர். இதையடுத்து வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து மணமகனின் உறவினர்கள் சிலர், மணப்பெண்ணை சந்திக்க நேற்று முன்தினம் இரவு அவரது அறைக்கு சென்றனர். அப்போது அங்கு மணப்பெண் குமாரி இல்லை. மணப்பெண்ணின் வீட்டாரிடம் தெரிவித்தனர். அவர்கள் மண்டபம் முழுவதும் மணப்பெண்ணை தேடினர். ஆனால், கிடைக்கவில்ைல. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மணப்பெண் என்ன ஆனார் என்று பதற்றமடைந்தனர். தொடர்ந்து அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது மண்டபத்தில் இருந்த மணப்பெண் ஒரு வாலிபருடன் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து விசாரித்தபோது குமாரி, தனது காதலனுடன் ஓடியது தெரிந்தது. இதனால், திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் ராமாஞ்சுலு மற்றும் அவரது பெற்றோர் மதனப்பள்ளி முதலாவது நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் மணப்பெண் வீட்டாரால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம். எங்களுக்கு மன உளைச்சலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நாங்கள் செலவு செய்த ₹2 லட்சத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post விடிந்தால் திருமணம்; மண்டபத்தில் இருந்த மணப்பெண் ஓட்டம்: மணமகன், பெற்றோர் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Andhra State, ,Ananthapuram District, N.P. Sivaiya ,Kanthammal ,Gunda ,Ramanjulu ,Karnataka ,
× RELATED காக்கிநாடா சஞ்சய் நகர் பகுதியில்...