×

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி: இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல் அவுட்

லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிய, 2வது டெஸ்ட்டை இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அசத்தியது. இந்நிலையில் ஹெட்டிங்க்லியின் லீட்ஸ் மைதானத்தில் 3-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். ஆனால் முதல் நாள் ஆட்டத்திலேயே இந்திய அணி 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. புஜாரா, கோலி, பண்ட், ஜடேஜா என ஐந்து பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகினர். கே.எல். ராகுல் டக் அவுட்டாகி வெளியேறினார். இந்திய அணி 40.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்களில் சுருண்டது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 19 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் (3), ஓவர்டென் (3), ராபின்சன் (2), சாம் கர்ரன் (2) என அனைத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தொடங்கியுள்ளது. …

The post இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி: இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல் அவுட் appeared first on Dinakaran.

Tags : England ,India ,Leeds ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…