×

பட்டியலின மக்கள் குறித்து பேசிய வழக்கு: மீரா மிதுன் ஜாமீன் மனு தள்ளுபடி: செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தில்  கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை  வெளியிட்ட நடிகை மீரா மிதுன் ,  டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட  7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.  இந்நிலையில், கேரளாவில் வைத்து மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், ஆகஸ்ட் 14 ம் தேதி  கைது செய்யப்பட்டனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் பேச்சு சமுதாயத்தில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துவதாகவும் மோதலை தூண்டும் விதத்தில் உள்ளது. தொடர்ந்து இதேபோன்ற குற்றச் செயலில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். மீரா மிதுன் மீது ஏற்கனவே 5 வழக்குகள் நிலுவையில்  உள்ளது. அதேபோன்று அவரின் ஆண் நண்பர் இந்த வீடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றார். எனவே, இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.அதேபோல புகார்தாரரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு சார்பிலும் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களை  தொடர்ந்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி செல்வகுமார், புலன்விசாரணை ஆரம்ப நிலையிலேயே உள்ளதாகவும், சிறையில் அடைத்து மிகக் குறுகிய காலமே ஆகியுள்ளதாலும் ஜாமீன் வழங்க முடியாது என கூறி இருவரின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்….

The post பட்டியலின மக்கள் குறித்து பேசிய வழக்கு: மீரா மிதுன் ஜாமீன் மனு தள்ளுபடி: செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Mira Mithun ,Court of Chessons ,Chennai ,Chesons ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...