×

ராணிப்பேட்டை அதிமுக, பாமக நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எ.வி.சாரதி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர்.   இதற்கான நிகழ்ச்சி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர்கள் திமுகவில் இணைந்தனர். ஆற்காடு நகர மாவட்ட பிரதிநிதி என்.கண்ணன், நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் சி. தட்சிணாமூர்த்தி, இளைஞர் அணி செயலாளர் எம். கமலஹாசன், 6வது வார்டு பிரதிநிதி எ.டி.எஸ். சுரேஷ், முன்னாள் நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் எ.டி.எஸ். ராஜீவ்காந்தி, இணைச் செயலாளர் டி. ராஜ்குமார், 6வது வட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் எம். தங்கராஜ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கே.கே. சண்முகம், 16வது வார்டு இளைஞர் அணி செயலாளர் என். ராமதாஸ், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் டி. உமாபதி, கே. கார்த்திகேயன், ஜெ. ஜெயராஜ், எம். மணிவண்ணன், சி. நடராஜன், எம். மதன்ராஜ், எம். ஹரி, எஸ். பாலமுருகன், டி.எஸ். சிவா, எஸ். ராஜேஷ், ஆர். ஜெகன், கே. முரளிதரன் நாம் தமிழர் கட்சி முன்னாள் நகர செயலாளர் ஜெ. துரைமுருகன் உட்பட பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர்.   இந்நிகழ்ச்சியில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா,அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ.வேலு, ஜெகத்ரட்சகன், துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி, வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் ஏ.பி. நந்தகுமார், தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்….

The post ராணிப்பேட்டை அதிமுக, பாமக நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் appeared first on Dinakaran.

Tags : Ranipet AIADMK ,BMC ,DMK ,Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,AIADMK ,Ranipet ,AV Sarathy ,Naam Tamilar ,BAM ,M. K. Stalin ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தரை...