×

மெல்பர்ன் திரைப்பட விழாவில் சிறந்த நடிகராக சூர்யா தேர்வு

சென்னை: மெல்பர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்த நடிகை களாக வித்யாபாலன், சமந்தாவும் தேர்வு செய்யப்பட்டார்கள். ஆஸ்திரேலியா நாட்டின் மெல்பர்ன் நகரில் 12வது இந்திய திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில் இந்திய அளவில் சிறந்த படமாக சூரரைப்போற்று படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் நடித்த  சூர்யா சிறந்த நடிகராக ேதர்ந்தெடுக்கப்பட்டார். இந்த படத்தை சூர்யாவே தயாரித்திருந்தார்.  சுதா கொங்கரா இயக்கி இருந்தார். இதில் சூர்யா குறைந்த கட்டணத்தில் பயணிகள் விமானத்தை இயக்கிய கேப்டன் கோபிநாத்தாக நடித்திருந்தார். சிறந்த நடிகை விருது ஷெர்னி என்ற இந்தி படத்தில் நடித்த வித்யா பாலனுக்கு கிடைத்தது. இந்த படத்தில் அவர் காடுகளை அழிக்கும் சமூக விரோதிகளை எதிர்த்து போராடும் காட்டிலாகா அதிகாரியாக நடித்திருந்தார். சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது தி கிரேட் இண்டியன் கிச்சன் படத்தில் நடித்த நிமிஷா சஜயனுக்கு கிடைத்தது. சிறந்த வெப் சீரிஸ் நடிகையாக சமந்தா தேர்வானார். தி பேமிலி மேன் 2 என்ற வெப் சீரிசில் இலங்கையை சேர்ந்த மனித வெடிகுண்டு பெண்ணாக அவர் நடித்திருந்தார். மிர்சாபூர் 2 சிறந்த வெப் சீரிசாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் நடித்த பங்கஜ் திரிபாதிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த இயக்குனர் விருது லூடோ இந்தி படத்தை இயக்கிய அனுராக் பாசுக்கு கிடைத்தது….

The post மெல்பர்ன் திரைப்பட விழாவில் சிறந்த நடிகராக சூர்யா தேர்வு appeared first on Dinakaran.

Tags : Suriya ,Melbourne Film Festival ,Chennai ,Melbourne Indian Film Festival ,Vidyapalan ,Samantha ,Dinakaran ,
× RELATED பாலா இயக்கிய வணங்கான் அடுத்த மாதம் வெளியாகிறது