×

விரைவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி: ஒன்றிய சுகாதார அமைச்சர் தகவல்

ராஜ்கோட்: நாடு முழுவதும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில்  ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் கொரோனா தடுப்பூசி போட ஒன்றிய அரசு உறுதி பூண்டுள்ளது. குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆராய்ச்சியை மேற்கொள்ள ‘சைடஸ் காடிலா’ மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு ஒப்பதல் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான முடிவுகள் அடுத்த மாதத்தில் தெரியவரும். இதனால் குழந்தைகளுக்கான தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பாரத் பயாடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை 2 முதல் 18 வயதுடையோருக்கான மூன்றாம் கட்ட பரிசோதனை செப்டம்பரில் தொடங்கும்’ என்றார். ஏற்கனவே, ஒன்றிய அரசும், சைடஸ் காடிலா நிறுவனம் உருவாக்கி வரும் தடுப்பூசியானது, 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கு விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த தகவலை ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. அந்நிறுவனத்தின் சைகோவ் – டி தடுப்பூசியை குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. …

The post விரைவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி: ஒன்றிய சுகாதார அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Union ,Minister of ,Health ,Rajkot ,Union Health Minister ,Mansuk ,Minister ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது