×

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு 6 தொகுதி: தவாக, ஆதித்தமிழர் பேரவை, மவிகவுக்கு தலா ஒரு தொகுதி: மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று கையெழுத்தானது.   தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் அரசியல்  கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மமகவுக்கு 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 6, இந்திய கம்யூனிஸ்ட் 6,  மதிமுக 6,  காங்கிரஸ் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.இதை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், சவுந்தரராஜன் ஆகியோர் நேற்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த அண்ணா அறிவாலயம் வந்தனர். அப்போது, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும்-மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் உடன்பாடு ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டனர். தொடர்ந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினர் நேற்று  பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும்-தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகனும்  தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். தமிழக வாழ்வுரிமை கட்சி தமிழகத்தில் 1 சட்டமன்ற தொகுதியை பங்கீட்டு கொள்வதெனவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஆதித்தமிழர் பேரவை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆதித்தமிழர் பேரவை கட்சியின் நிறுவன தலைவர் இரா.அதியமான் ஆகியோர் தொகுதி  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஆதித்தமிழர் பேரவை தமிழகத்தில் 1 சட்டமன்ற தொகுதியை பங்கீட்டு ெகாள்வதெனவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் திமுகவுடனான தொகுதி பங்கீட்டில்  மக்கள் விடுதலை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் விடுதலை கட்சியின் நிறுவன தலைவர் சு.க.முருகவேல் ஆகியோர் தொகுதி ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டனர். மக்கள்  விடுதலை கட்சி தமிழகத்தில் 1 சட்டமன்ற தொகுதியை  பங்கீட்டு கொள்வதெனவும்,  உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதெனவும்  முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அப்போது, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலட்சுமி  ஜெகதீசன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு எம்.எல்.ஏ., உடனிருந்தனர்….

The post திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு 6 தொகுதி: தவாக, ஆதித்தமிழர் பேரவை, மவிகவுக்கு தலா ஒரு தொகுதி: மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்து appeared first on Dinakaran.

Tags : Marxist-Communist ,DMK ,Davaga ,Adithamizhar Assembly ,Mavika ,M.K.Stalin. ,Chennai ,Marxist party ,Tamil Nadu Life Rights Party ,Davaka ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...