×

எஸ்.லதா இயக்கத்தில் மரகதமலை

சென்னை: சிறுவர்களுக்கான சாகச காட்சிகள் நிறைந்த படம், ‘மரகதமலை’. இதை எஸ்.லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, எல்.ஜி மூவிஸ் சார்பில் தயாரித்துள்ளார். சந்தோஷ் பிரதாப், தீப்ஷிகா, தம்பி ராமய்யா, ஜெகன், மாஸ்டர் சஷான்ந், அரிமா வர்மன், கலைக்கோவர்மன், மகித்ரா நடித்துள்ளனர். புலி, பாம்பு, யானை, கொரில்லா குரங்கு, டிராகன் ஆகிய விலங்குகளின் அனிமேஷன் காட்சிகள் இடம்பெறுகிறது.

பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, எல்.வி.முத்து கணேஷ் இசை அமைத்துள்ளார். பைஜூ டான் பாஸ்கோ எடிட்டிங் செய்ய, பி.சண்முகம் அரங்கம் அமைத்துள்ளார். டேஞ்சர் மணி சண்டை பயிற்சி அளித்துள்ளார். பாபி, சந்தோஷ் நடன காட்சிகள் அமைத்துள்ளனர். பா.விஜய், கே.டி.சேஷா பாடல்கள் எழுதியுள்ளனர். படம் குறித்து எஸ்.லதா கூறுகையில், ‘இது 18ம் நூற்றாண்டில் நடக்கும் கதை.

ஜமீனிடம் இருக்கும் புதையலை ஒரு கும்பல் கொள்ளையடிக்க முயற்சிக்கிறது. புதையலை காப்பாற்ற தனது மனைவி, பிள்ளையை காட்டிலுள்ள காளி கோயிலுக்கு ஜமீன் அனுப்புகிறார். அப்போது அவர்கள் பிரிந்து விடுகின்றனர். மீண்டும் அவர்கள் சேர்ந்தார்களா? ஜமீனின் புதையல் காப்பாற்றப்பட்டதா என்பதை சாகசங்கள் நிறைந்த மாயாஜால கதையாக சொல்லியிருக்கிறேன். தடா காட்டில் படப்பிடிப்பு நடத்தினோம். விரைவில் செவன்த் ஸ்டுடியோ சார்பில் கண்ணன் படத்தை வெளியிடுகிறார்’ என்றார்.

Tags : S. Latha ,Chennai ,LG Movies ,Santosh Pratap ,Deepshika ,Thambi Ramaiah ,Jagan ,Master Sashanth ,Arima Varman ,Kalaikovarman ,Mahithra ,P.G. Muthiah ,L.V. Muthu Ganesh ,Byju Don Bosco ,
× RELATED காதல் ரீசெட் ரிப்பீட் விமர்சனம்