- சந்தானம்
- சென்னை
- கே.ஜே. கணேஷ்
- வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட்
- விஜய் கே. செல்லையா
- கே7 ஸ்டுடியோஸ்
- சுதாமன் கிருஷ்ணா
சென்னை: வீனஸ் இன்ஃபோடெயின் மெண்ட் சார்பில் கே.ஜே.கணேஷ், K7 ஸ்டுடியோஸ் சார்பில் விஜய் கே.செல்லையா இணைந்து தயாரிக்க, துப்பறியும் நிபுணர் வேடத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ‘SANTA 20’ என்று தற்காலி கமாக பெயரிடப்பட்டுள்ள படம் உருவாகிறது. காலத்தை மாற்றி அமைத்து துப்பு துலக்குகின்ற திரில்லர் கதை கொண்ட இப்படத்துக்கான படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
சுதாமன் கிருஷ்ணா எழுதி இயக்குகிறார். மர்மங்கள், சஸ் பென்ஸ், நகைச்சுவை கலந்து படம் உருவாக்கப் படுகிறது. துப்பறியும் நிபுணரான சந்தானம், ஒரு குற்றத்தை கண்டறிய முற்படும்போது, எதிர்பாராத வகையில் பல்வேறு சாகசங்கள் செய்கிறார். அதன் முடிவு என்ன என்பது திரைக்கதை.
சந்தானம், கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியன், பிரதீப் ஆண்டனி, ஜென்சன் திவாகர், டிஎஸ்ஆர், ஃபவுஸி நடிக்கின்றனர். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்க, திலீப் சுப்பராயன் சண்டை பயிற்சி அளிக்கிறார். ஜாக்கி அரங்கம் அமைக்கிறார். கே.எல்.பிரவீன் எடிட்டிங் செய்ய, கார்த்திக் ஆனந்த கிருஷ்ணன் நிர்வாக தயாரிப்பு பொறுப்பேற்றுள்ளார்.
