×

3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்: உலக இளையோர் வில்வித்தையில் இந்தியா பதக்கவேட்டை

போலந்து: ஒலிம்பிக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் போலந்தில்  உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. நடைபெற்று வரும் இப்போட்டியில் இன்று நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட ஆடவர், கலப்புக்குழு மற்றும் மகளிர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்தியா கலந்துகொண்டுள்ளது. இதில் இந்தியா இதுவரை இல்லாத வகையில் 3 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. வில்வித்தையில் பலமாக பார்க்கக்கூடிய சீனா மற்றும் கொரியா நாட்டு வீரர், வீராங்கனைகள் இதில் கலந்துக்கொள்ளவில்லை.இதனால் இந்தியாவின் ஆதிக்கமே தொடர் முழுவதும் இருந்தது. இதில் பெண்கள் அணிக்கான காம்பவுண்ட் கேடட் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-துருக்கி அணிகள் சந்தித்தன. பர்னீத் கவுர், பிரியா குர்ஜார், ரிது வர்ஷினி ஆகியோர் அடங்கிய இந்திய அணியினர் இலக்கை நோக்கி துல்லியமாக அம்புகளை எய்து அசத்தியதுடன் 228-216 என்ற புள்ளி கணக்கில் துருக்கியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர். முன்னதாக தகுதி சுற்றில் மூவரும் இணைந்து மொத்தம் 2,067 புள்ளிகள் எடுத்து புதிய உலக சாதனை படைத்தனர். இதற்கு முன்பு அமெரிக்கா 2,045 புள்ளி எடுத்ததே சாதனையாக இருந்தது. இதன் ஆண்கள் பிரிவில் சஹில் சவுத்ரி, மிஹிர் நிதின், குஷல் தலால் ஆகியோர் அடங்கிய இந்திய அணியினர் 233-231 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினர். இதேபோல் கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் பிரியா குர்ஜார்- குஷல் தலால் ஜோடி 155-152 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவை சாய்த்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்திய வீராங்கனை பிரியா குர்ஜார், குழுவு பிரிவுக்கான தகுதிச்சுற்றில் புதிய உலக சாதனைப்படைத்திருந்தார். ஆனால் தனிநபர் பிரிவில் அவரால் வெள்ளிப்பதக்கம் மட்டுமே வெல்ல முடிந்தது. இறுதி சுற்றில் சேலின் ரோட்ரிக்யிஸிடம் 136 – 139 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்ந்தார். இதேபோல ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பன்ரீத் இங்கிலாந்தின் ஹாலீ, போல்டன் என்பவரை 140 – 135 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இதன் மூலம் உலக இளையோர் வில்வித்தை போட்டியில் இந்தியா 5 பதக்கங்களுடன் பெருமை கொண்டுள்ளது….

The post 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்: உலக இளையோர் வில்வித்தையில் இந்தியா பதக்கவேட்டை appeared first on Dinakaran.

Tags : India ,World Junior Archery ,Poland ,World Junior Archery Championship ,Olympics ,junior archery ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!