×

நிதித்துறையின் கீழ் தணிக்கைத்துறை

சென்னை: சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: பல ஆண்டுகளாக 2000க்கும் மேற்பட்ட இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் தணிக்கைப் பத்திகள் நிலுவையில் உள்ளன. தணிக்கைப் பத்திகளின் எண்ணிக்கையை குறைக்க, அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி மேம்படுத்தப்படும். தவறுகளை விரைவாக கண்டறிவதற்கும், தாமதமின்றி திருத்துவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கும் வலுவான உள் தணிக்கை முறை ஒன்றை அரசிற்குள் நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். எனவே, அரசின் உட்தணிக்கை அமைப்பு முறையில் அடிப்படை சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும். அனைத்து அரசுத் துறைகளிலும் முகமைகளிலும் உள் தணிக்கை செயல்பாடுகளை திறம்பட மேற்கொள்வதற்காக அரசில் செயல்படும் அனைத்துத் தணிக்கைத் துறைகளும் நிதித் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு ஒருங்கிணைக்கப்படும். தணிக்கைத் துறைகளின் திறன் மேம்படுத்தப்படும். இவ்வாறு பேசினார்….

The post நிதித்துறையின் கீழ் தணிக்கைத்துறை appeared first on Dinakaran.

Tags : Audit Department ,Finance Department ,Chennai ,Finance Minister ,Palanivel Thiagarajan ,Assembly ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...