×

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு வேளாண் பட்ஜெட் காணிக்கை: தமிழ்நாட்டில் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல்

சென்னை: தமிழ்நாட்டில் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. விவசாயத்துக்கான தனி பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பொது பட்ஜெட்டை போல வேளாண் பட்ஜெட்டும் காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு வேளாண் பட்ஜெட்டை காணிக்கையாக்குகிறேன் என்று வேளாண்துறை அமைச்சர் கூறியுள்ளார்.கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு அனைத்தும் வேளாண் துறைக்குள் அடங்கும். வேளாண் பட்ஜெட்டை தயாரிப்பதற்கு முன்பே விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டது. சர்வதேச நிபுணர்களின் கருத்த கேட்டு வேளாண் பட்ஜெட்டை தயாரித்துள்ளோம். வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட் செய்வது என்பது தொலைநோக்கு திட்டமாகும். தஞ்சை, கோவை, திருச்சி, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்ததாக வேளாண்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்….

The post வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு வேளாண் பட்ஜெட் காணிக்கை: தமிழ்நாட்டில் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Agriculture Minister ,M. R.R. Q ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...