×

ராக்கெட் இன்ஜினில் திடீர் கோளாறு இஓஎஸ்-03 திட்டம் தோல்வி: சுற்றுப்பாதையை எட்டவில்லை

ஹரிகோட்டா: `புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், இலக்கை எட்ட முடியாமல் தோல்வியில் முடிந்தது,’ என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை ஆகியவற்றை அறிந்து கொள்ள உதவும் இஓஎஸ்-03 என்ற அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்தது. இதனை ஏவுவதற்கான 26 மணி நேர கவுன்ட் டவுன் முடிந்த நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட்டின் கிரையோஜெனிக் இன்ஜின் பகுதியில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், இஓஎஸ்-03 செயற்கைக்கோள் புவி சுற்றுப்பாதையை வெற்றிகரமாக எட்ட முடியாமல் தோல்வியில் முடிந்தது. இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதால், செயற்கைக்கோளை புவிவட்ட பாதைக்கு செலுத்த முடியாமல் போனது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில், `நான்கு பிரிவுகளாக அமைக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் முதல் 2 நிலைகள் சிறப்பாகவே செயல்பட்டு பிரிந்தன. ஆனால், ராக்கெட்டின் கிரையோஜெனிக் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயற்கைக்கோளை புவிசுற்றுப்பாதைக்குள் ராக்கெட்டால் வெற்றிகரமாக நிலைநிறுத்த முடியாமல் போனது. இதனால், இத்திட்டம் முழுமை அடையவில்லை,’ எனத் கூறப்பட்டுள்ளது. இஸ்ரோ தலைவர் கே. சிவன் அளித்த பேட்டியில், “ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட்டின் கிரையோஜெனிக் இன்ஜின் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்த முடியவில்லை. என்னுடைய அனைத்து நண்பர்களுக்கும் இதைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்,’’ என்றார். …

The post ராக்கெட் இன்ஜினில் திடீர் கோளாறு இஓஎஸ்-03 திட்டம் தோல்வி: சுற்றுப்பாதையை எட்டவில்லை appeared first on Dinakaran.

Tags : Harikota ,Earth ,
× RELATED வளமான வாழ்வருளும் வராஹர்