×

உள்ளாட்சி தேர்தல் குறித்து 2வது நாளாக அதிமுக ஆலோசனை: எஸ்.பி.வேலுமணி பங்கேற்றதால் பரபரப்பு

சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். நேற்று முன்தினம் காலையில் நடந்த கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 3 மாவட்ட நிர்வாகிகள் பங்ககேற்றனர். இதைதொடர்ந்து நேற்று 2வது நாளாக, காலை 10.30 மணிக்கு, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அப்போது துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், மற்றும்  முன்னாள் அமைச்சர் தங்கமணி, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து  கொண்டனர். நேற்று நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் கலந்து கொண்டார். சென்னை மற்றும் கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான சுமார் 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்தும், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக இபிஎஸ், ஓபிஎஸ் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில், சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக குறைந்த சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் தோல்வி அடைந்துள்ளது. அதனால் நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற பாடுபட வேண்டும். வெற்றிவாய்ப்புள்ளவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள். அவருக்கு, மற்ற நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேட்டுக் கொண்டனர்….

The post உள்ளாட்சி தேர்தல் குறித்து 2வது நாளாக அதிமுக ஆலோசனை: எஸ்.பி.வேலுமணி பங்கேற்றதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Nadi ,Chennai, ,Chief of the Chief ,Rayapet, Chennai ,Rural-Lokayam Election ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்