×

டாக்சியில் மகளை வழி மாற்றி அழைத்து சென்றதால் டிரைவர் கழுத்தை நெரித்த பிரியங்கா சோப்ரா அம்மா

மும்பை: தனது காதல் கணவர் நிக் ஜோனாஸுடன் அமெரிக்காவில் செட்டிலான பிரியங்கா சோப்ரா படப்பிடிப்புக்கு மட்டும் இந்தியா வந்து செல்கிறார். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரணாசி’ பான் வேர்ல்ட் படத்தில் மந்தாகினி என்ற வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது ‘தி பிளஃப்’ என்ற ஹாலிவுட் படத்தில் பிளடி மேரி என்ற அதிரடி ஆக்‌ஷன் நிறைந்த வேடத்தில் நடித்துள்ளார். அதன் புரோமோஷன் நிகழ்சியில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ரா அவரது தாய் மது சோப்ரா செய்த சவாலான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், ‘‘என் அம்மாவுக்குள் இருந்த பிளடி மேரி ஒரு முறை வெளியே வந்துவிட்டது. டெல்லியில் நானும், அம்மாவும் டாக்சியில் சென்றோம். டெல்லியில் ஓட்டலில் தங்கியிருந்தோம். இரவு 11 மணி அளவில் டாக்சியில் பயணம் செய்தோம். என்னை பார்த்ததும், திசை மாற்றி வேறொரு வழியில் டாக்சியை ஒட்டி சென்றார் டிரைவர். முதலில் அம்மா டிரைவரிடம் அமைதியாக இது பற்றி கேட்டபோது, அவன் மழுப்பலாக பதில் சொன்னான். உடனே அவனது கழுத்தை அம்மா பிடிக்க, ‘நான் ஷார்ட்கட்டில் தான் செல்கிறேன்’ என்று கூறினான். அவன் பொய் சொல்வதை அம்மா கண்டுபிடித்துவிட்டார்.

டாக்சியில் நானும், அம்மாவும் தான் இருந்தோம். எனக்கு எதுவும் புரியவில்லை. பின் இருக்கையில் இருந்தபடியே ஒரு கையால் டிரைவரின் கழுத்தை இறுக்கமாக பிடித்து, ஸ்டியரிங்கை மற்றொரு கையால் பிடித்து மெயின் ரோட்டுக்கு போறியா, இல்லையா என்று கத்தி அவனை அம்மா நிலைகுலைய செய்தார். என் அம்மாவை அப்படி ஆக்ரோஷமாக நான் பார்த்ததே இல்லை. உடனே டிரைவர் காரை திருப்பிக்கொண்டு சரியான வழியில் சென்றான். அதன் பிறகு 4 மாதங்களுக்கு என் அம்மாவுடன் நான் வாக்குவாதம் செய்யவே இல்லை. எங்கம்மா என்ன சொன்னாலும் சரிமா சரிமா என்று மட்டும் தான் சொன்னேன்’’ என்றார்.

Tags : Priyanka Chopra ,Mumbai ,US ,Nick Jonas ,India ,Mandakini ,Rajamouli ,Mahesh Babu ,Prithviraj Sukumaran ,Bloody Mary ,Hollywood ,
× RELATED ஆண்களுக்கு பூனம் பஜ்வா எச்சரிக்கை