×

வணிகவரித்துறையில் 6 அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: வணிகவரித்துறையில் 6 கூடுதல் ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து, செயலாளர் ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: வணிகவரித்துறை நுண்ணறிவு பிரிவு கூடுதல் ஆணையர் ராதா வணிகவரித்துறை சட்டப்பிரிவு கூடுதல் ஆணையராகவும்,தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய உறுப்பினர் தேவேந்திரா பூபதி ஜிஎஸ்டி அல்லாத பிரிவு கூடுதல் ஆணையராகவும், மறு ஆய்வு மேல்முறையீட்டு பிரிவு கூடுதல் ஆணையர் பழனி வணிகவரித்துறை நுண்ணறிவு பிரிவு கூடுதல் ஆணையராகவும், ஜிஎஸ்டி அல்லாத பிரிவு கூடுதல் ஆணையர் இசைவாணி தமிழ்நாடு விற்பனை விரி மேல்முறையீட்டு தீர்ப்பாய உறுப்பினராகவும், வரிவசூலிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் ஆணையர் பரமேஸ்வரன் மறு மற்றும் மேல்முறையீட்டு பிரிவு கூடுதல் ஆணையராகவும், சட்டப்பிரிவு கூடுதல் ஆணையர் விஜயகுமார் வரி வசூல் மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்….

The post வணிகவரித்துறையில் 6 அதிகாரிகள் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Tax Department ,Chennai ,Jyoti Nirmalasamy ,Commercial Tax Department ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு...