×

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு வருமான வரித்துறை விழிப்புணர்வு கூட்டம்: பெரம்பலூரில் இன்று நடக்கிறது

 

பெரம்பலூர், ஜூன்12: பெரம்பலூரில் வருமான வரித்துறை சார்பில் இன்று (12ம் தேதி) நடைபெறும் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொள்ள பெரம்பலூர்-அரியலூர் ஆகிய 2 மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி வருமானவரித்துறை துணை ஆணையர் கருப்ப சாமி பாண்டியன் வெளி யிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :

வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வருமான வரி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வரி செலுத்துவது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் எடுத்துள்ள புதிய முயற்சிகள், இணைய வழி செயல்பாடுகள், வரி செலுத்துவதில் ஏற்பட்டுள்ள மேம்பாடு மற்றும் வரி செலுத்துவோரின் பங்கு, கடமைகள் குறித்து விளக்கும் வகையிலும் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பெரம்பலூர் அஸ்வின் கூட்ட அரங்கில் இன்று(12ஆம்தேதி)மாலை 4 மணிக்கு இந்த விழிப் புணர்வுக் கூட்டம் நடை பெறுகிறது.

இதில் வருமான வரி செலுத்துதல் தொடர்புடைய சந்தேகங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு துணை ஆணையர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர். எனவே பெரம்பலூர் வருமான வரி சரகத்துக்கு உட்பட்ட பெரம்பலூர், அரியலூர் ஆகிய இரண்டு மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த வரி செலுத்துவோர், வணிகர்கள், பட்டய கணக்காளர்கள், வரி ஆலோசகர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என திருச்சி வருமான வரித்துறை துணை ஆணையர் கருப்பசாமி பாண்டியன் வெளி யிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு வருமான வரித்துறை விழிப்புணர்வு கூட்டம்: பெரம்பலூரில் இன்று நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Ariyalur ,Income Tax Department ,Trichy ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் /அரியலூர் பாடாலூரில்...