×

தேவனூர்புதூர் பகுதியில் செயல்படாத செக்போஸ்ட்

உடுமலை: உடுமலையையடுத்த தேவனூர்புதூர் பகுதி திருப்பூர் மற்றும் பொள்ளாச்சி மாவட்டங்களின் எல்லைப் பகுதியாக உள்ளது. உடுமலையையடுத்த மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான வன விலங்குகளும், அரிய வகை மரங்களும் உள்ளது.இவற்றை சமூக விரோதிகள் மாவட்ட எல்லை வழியாக கடத்திச் செல்லும் அபாயம் உள்ளது. அத்துடன் பாலாற்றங்கரையில் கொட்டிக் கிடக்கும் மணல் சமூக விரோதிகளின் கண்ணில் உறுத்தலாகவே உள்ளது.மேலும் மணலுக்கு நல்ல விலை கிடைப்பதால் மாவட்ட எல்லையைக் கடந்து பல பகுதிகளுக்கு மணல் கடத்தல் நடந்து வந்தது. போலி மதுபானங்கள்,போதை வஸ்துக்கள் போன்றவையும் மாவட்டம் விட்டு மாவட்டம் கடத்தப்படும் நிலையும் உள்ளது.இத்தகைய அனைத்து சமூக விரோத செயல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாவட்ட எல்லையான தேவனூர்புதூர் பகுதியில் புதிய செக்போஸ்ட் திறக்கப்பட்டது. புதிதாகப் பொறுப்பேற்ற டிஎஸ்பி இதனை திறந்து வைத்தார்.ஆனால் இந்த செக்போஸ்ட் இதுவரை பயன்பாட்டுக்கு வராததால் சமூக விரோதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலை உள்ளது.எனவே இந்த செக்போஸ்டில் போதுமான அளவில் போலீசாரைப் பணியமர்த்தி 24 மணி நேரமும் செயல்படும் நிலையை உருவாக்க வேண்டும்.நமது பகுதியின் வன வளமும் கனிம வளமும் கொள்ளை போவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது….

The post தேவனூர்புதூர் பகுதியில் செயல்படாத செக்போஸ்ட் appeared first on Dinakaran.

Tags : Checkpost ,Devanoorputhur ,Udumalai ,Udumalayakithadu ,Devanurpur ,Tiruppur ,Pollachi ,Uttomanizai ,Dinakaran ,
× RELATED மூணாறு சாலையில் உலா வந்த காட்டு யானை