×

மெட்ரோ ரயிலில் வேலை வாங்கி தருவதாக 21 லட்சம் மோசடி: அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளர் கைது

திருவள்ளூர்: ஆரணி, பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் கிருபா (42). இவர் வேலூர் மாவட்டம், பாகாயம் அடுத்த ஓட்டேரி பகுதியில் உள்ள முத்துரங்கம் அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு நகை கடையில் நகை வாங்க சென்றுள்ளார். அப்போது அந்த கடையில் பணியாற்றி வந்த திருவள்ளூரை அடுத்த பென்னலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் (33). என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கிருபா தான் கல்வித்துறையில் அரசு அதிகாரியாக பெரிய பொறுப்பில் இருப்பதாக கூறி தன்னை அறிமுகம் செய்துகொண்டுள்ளார். மேலும் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் பணிபுரியும் பெரிய அதிகாரிகளை தனக்கு தெரியும்.எனவே அவர்கள் மூலமாக சென்னை மெட்ரோ ரயிலில் சூபர்வைசர் வேலை வாங்கித் தருவதாக சந்திரசேகரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். சென்னை மெட்ரோ ரயிலில் சூபர்வைசர் வேலை வாங்கிக்கொடுக்க வேண்டுமென்றால் 21 லட்சம் தரவேண்டும் என கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய சந்திரசேகர் 21 லட்சத்தை கடந்த 2019ம் ஆண்டு கிருபாவிடம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட கிருபா தான் கூறியது போல் வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். தலைமறைவாக உள்ள கிருபா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் எஸ்பியிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில்  போலீசார் கிருபாவை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை அருகே பதுங்கியிருந்த கல்லூரி கௌரவ விரிவுரையாளர் கிருபாவை கைது செய்து ஊத்துக்கோட்டைக்கு அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post மெட்ரோ ரயிலில் வேலை வாங்கி தருவதாக 21 லட்சம் மோசடி: அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Krupa ,Pallikoda Street, Arani ,Otteri ,Bagayam, Vellore district ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் சார்பதிவாளர் வீட்டில் நடந்த சோதனை நிறைவு..!!