×

தமிழக கோயில்களில் தமிழில் அர்ச்சனை ஆரம்பம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை: கோயில்களில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ செய்யும் திட்டத்தை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைச்சர் சேகர்பாபு அன்னை தமிழில்  அர்ச்சனை செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, அன்னை தமிழில் அர்ச்சனை  செய்பவர்கள் தொடர்பான அர்ச்சகர்கள் பெயர், அவரின் தொலைப்பேசி எண்கள் அடங்கிய அறிவிப்பு பலகையை திறந்து வைத்தார்.  இதை தொடர்ந்து கபாலீஸ்வரர் கோயிலில் அர்ச்சகர்கள்  மூலம் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ வேலு, செயலாளர் சந்திர மோகன், ஆணையர் குமரகுருபரன், தக்கார் விஜயகுமார், இணை ஆணையர் காவேரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். =இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியாவது: கபாலீஸ்வரர் கோயிலில் தமிழில்  அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 47 முதுநிலை கோயில்களில் இந்த மாதம் இறுதிக்குள் அறிவிப்பு பலகை நிறுவ வேண்டும் என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து 539 கோயில்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.தமிழில் அர்ச்சனைக்கு தொடர்பு கொள்வது எப்படி?மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தமிழில் அரச்சனை செய்பவர்களின் பெயர் பலகை கோயில் வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில், பாலாஜி குருக்கள் 9444722594, கபாலி குருக்கள் 9444775859, வேங்கட சுப்ரமணியன் குருக்கள் 9840166701 ஆகியோரின் பெயர், தொலைப்பேசி எண்களுடன் வெளியிடப்பட்டுள்ளது….

The post தமிழக கோயில்களில் தமிழில் அர்ச்சனை ஆரம்பம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister Segarbabu ,Arshan ,Tamil ,Tamil Nadu ,Chennai ,Department of State ,Minister ,Segarbabu ,Mayalapur Kapaleeswarar Temple ,Segarbapu ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...