×

லஞ்சம் வாங்கிய விவகாரம் மகளிர் இன்ஸ்பெக்டர் 2 போலீசார் மாற்றம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகாவுக்கு உட்பட்ட செல்லங்குப்பம் கிராமத்தில் 15 வயது சிறுமியை அவரது தாத்தா பல ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், இதனால் கடந்த 5 நாட்களுக்கு முன் குழந்தை பிறந்து இறந்துவிட்டதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்ததில் பாதிக்கப்பட்ட சிறுமி, அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருவதாகவும், கொரோனா காலம் என்பதால் பள்ளிக்கு செல்லவில்லை என்பதும் தெரியவந்தது. மேலும் இவரது தாய் மற்றும் அண்ணன் ஆகியோர் இறந்து 14 வருடங்கள் ஆகிறது. தந்தையும் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து சிறுமி அவளது தாத்தா வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு, தாத்தா கடந்த மூன்று ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு செய்ததால் கர்ப்பம் தரித்தார். கடந்த 30ம்தேதி சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்து இறந்துள்ளது. இந்த விவகாரத்தை மறைத்த அதே ஊரை சேர்ந்த முனியாண்டி, இந்திராணி, செவிலியர் ராஜாமணி ஆகிய 3பேர் மீது இன்ஸ்பெக்டர் இளவழகி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளார். ஆனால், ராஜாமணி என்பவரை வழக்கில் இருந்து விடுவிக்க இன்ஸ்பெக்டர் இளவழகி, காவலர்கள் கோகிலா, கீதாராணி ஆகியோர் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் இளவழகி, காவலர்கள் கோகிலா, கீதாராணி ஆகியோரை கள்ளக்குறிச்சி ஆயுதபடைக்கு பணியிட மாற்றம் செய்து எஸ்பி ஜியாவுல்ஹக் உத்தரவிட்டுள்ளார். …

The post லஞ்சம் வாங்கிய விவகாரம் மகளிர் இன்ஸ்பெக்டர் 2 போலீசார் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Kallakkurichi ,Chelenguppam ,Thirukovilur Thirukovilur Thaluka ,Kallakkurichi District ,Inspector ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...