சென்னை: காதல் தேசம், விஐபி, படையப்பா உள்பட பல படங்களில் நடித்தவர் அப்பாஸ். திடீரென சினிமாவிலிருந்து விலகி நியூசிலாந்துக்கு சென்று செட்டில் ஆனார். இப்போது பல வருடங்கள் கழித்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் கூறியது: ஒரு பாத்ரூம் விளம்பரத்தில் நடித்தது குறித்து பலரும் என்னை கேலியும், கிண்டலும் செய்தார்கள். பெண்கள் மட்டும் தான் பாத்ரூம் கழுவ வேண்டுமா? ஆண்கள் சுத்தம் செய்யக்கூடாதா? என் நான் கேட்டேன். சில பேர் ஏன்னிடம் நேரடியாகவே, உங்களுக்கு நடிக்க வேறு விளம்பரமே கிடைக்கவில்லையா? பாத்ரூம் கிளீனிங் விளம்பரத்தில் தான் நடிக்க வேண்டுமா என்று கிண்டல் செய்தார்கள். ‘ஆமாயா சுத்தம் முக்கியம்’ என்று அவர்களிடம் நான் தில்லாக பதில் அளித்தேன். கிண்டல் செய்பவர்கள் யாரும் சோறு போட மாட்டார்கள். ஆனால், நான் சினிமா வாய்ப்பு இல்லாமல் இருந்த நேரத்தில் அந்த விளம்பரத்துக்காக எனக்கு 8 வருடம் ஒப்பந்தம் போடப்பட்டு நல்ல சம்பளம் கொடுத்தார்கள். அந்த பணம் தான் எனக்கு சோறு போட்டது. இப்போது ஒரு பெரும் இடைவௌிக்கு பிறகு நடிக்க வருகிறேன். தொடர்ந்து நல்ல வேடங்களில் நடிப்பேன்.

