×

விபத்தால் விலகிய முமைத்கான்

பல்வேறு மொழிப் படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி அசத்தியவர், முமைத்கான். சில படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லி வேடத்திலும் நடித்துள்ளார். கடந்த 2016ல் திடீரென்று ஒரு விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று உடல்நிலை தேறியுள்ள அவர், அதற்கு பிறகு திரையுலகை விட்டு ஒதுங்கினார். தற்போது ஐதராபாத்தில் மேக்கப் மற்றும் சிகையலங்காரம் குறித்த பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், ‘கடந்த 2006ல் ஏற்பட்ட திடீர் விபத்தில் சிக்கிய நான், கிட்டத்தட்ட 15 நாட்கள் வரை கோமாவில் இருந்தேன். மூளையில் சில நரம்புகள் வெடித்துவிட்டதாக டாக்டர்கள் சொன்னார்கள். அதற்கு பிறகு நான் எந்த கடினமான வேலையையும் செய்யக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தியதால், 7 வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தேன். அப்போது கிடைத்த ஓய்வில் மேக்கப் மற்றும் புதுவிதமான சிகையலங்காரம் குறித்து பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டு, தற்போது ஐதராபாத்தில் இன்ஸ்டிடியூட் ஒன்றை நடத்தி வருகிறேன்’ என்றார்.

Tags : Mumaid Khan ,Hyderabad ,
× RELATED கல்லூரி நிகழ்ச்சிக்கு கவர்ச்சியாக...