×

மனம் மாறிய பிரக்யா

தமிழிலும், மலையாளத்திலும் நடித்தவர் பிரக்யா நாக்ரா. ஜீவா ஜோடியாக ‘வரலாறு முக்கியம்’ என்ற படத்தில் அறிமுகமானார். ஹரியானாவின் அம்பாலாவிலுள்ள பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். விளம்பரத்துறையில் தனது வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பு, தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை டெல்லியில் முடித்தார். அவரது தந்தை இந்திய ஆயுதப்படையில் பணியாற்றியவர். சில காலம் சென்னையில் பணி அமர்த்தப்பட்டார். இதையடுத்து அடிக்கடி சென்னைக்கு வந்த பிரக்யா நாக்ரா, டெல்லியில் பொறியியல் படிப்பை தொடர்ந்தபோது, மாடலிங்கில் அதிக ஆர்வம் ஏற்பட்டு நிறைய விளம்பரங்களில் நடித்தார்.

படிக்கும்போது தேசிய மாணவர் படை உறுப்பினராக இருந்தார். அப்போது தந்தையை போல் ஆயுதப்படையில் சேர விரும்பினார். இறுதியில் அவர் திரைத்துறையிலேயே வாழ்க்கையை தொடர முடிவு செய்து சென்னையில் குடியேறினார். தமிழில் ‘என் 4’, ‘பேபி அண்ட் பேபி’ ஆகிய படங்களில் நடித்த அவர், தற்போது ‘இதயம் முரளி’ படத்தில் நடித்துள்ளார். பிரக்யா நாக்ராவுக்கு டான்ஸ் ஆடுவது, பாட்டு பாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அவரை இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். அடிக்கடி போட்டோ ஷூட் செய்து விதவிதமான போட்டோக்களை பதிவிடுவது பிரக்யா நாக்ராவின் வழக்கம். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள போட்டோக்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Tags : Pragya ,Pragya Nagra ,Jeeva ,Ambala, Haryana ,Delhi ,Indian Armed Forces ,Chennai ,
× RELATED கல்லூரி நிகழ்ச்சிக்கு கவர்ச்சியாக...