×

நான் படாத கஷ்டமே கிடையாது: சாய் தன்ஷிகா உருக்கம்

சென்னை: நான் படாத கஷ்டமே கிடையாது என உருக்கமாக கூறியிருக்கிறார் சாய் தன்ஷிகா. தன்ஷிகா பெயரில் சினிமாவில் நடித்து வந்தவர், திடீரென ஆன்மிகத்தில் ஏற்பட்ட அதிக நாட்டம் காரணமாக, தனது பெயரை சாய் தன்ஷிகா என மாற்றிக்கொண்டார். திரைத்துறையில் இருக்கும் ஒரு சில துணிச்சலான நடிகைகளில் சாய் தன்ஷிகாவும் ஒருவர் என அவருக்கு பெயருள்ளது. ரசிகர்களும் அவரை அடிக்கடி தைரியமான நடிகை என சமூக வலைத்தளங்களில் பாராட்டுவார்கள்.

இது பற்றி சாய் தன்ஷிகா கூறும்போது, ‘‘மற்றவர்கள் நினைப்பது போலவும் சொல்வது போலவும் நான் துணிச்சலான பெண் கிடையாது. சொல்லப்போனால் தைரியம் குறைந்த பெண்களில் நானும் ஒருத்தி. வாழ்க்கையில் நான் படாத கஷ்டங்களே கிடையாது. அப்போதெல்லாம் மனம் உடைந்து அழுது இருக்கிறேன். இப்படித்தான் நான் காலம் கடந்து வந்துள்ளேன்’’ என்றார். இதைக் கேட்ட ரசிகர்கள், ‘சாய் தன்ஷிகாவின் இந்த பேச்சு எங்களுக்கு வியப்பு தருகிறது’ என ஒருவரும் ‘அவரும் ஒரு பெண்தானே. மனிதர்கள் எல்லோருமே பலவீனமானவர்கள்தான்’ என மற்றொரு ரசிகரும் ‘நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் சாய் தன்ஷிகா, தைரியமாக இருங்கள்’ என சிலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Tags : Sai Dhanshika Urukkam ,Chennai ,Sai Dhanshika ,Dhanshika ,
× RELATED ஊதாரி கதையில் ஜனனி