×

வாய்ப்பு கேட்டு நாகார்ஜூனாவின் 100வது படத்தில் நடிக்கும் தபு

 

ஐதராபாத்: தெலுங்கு முன்னணி ஹீரோ நாகார் ஜூனா, பல்வேறு மொழிகளில் நடித்துவிட்டு, தற்போது தனது 100வது படத்தில் நடிக்க தயாராகியுள்ளார். தற்காலிகமாக அப்படத்துக்கு ‘கிங் 100’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் ‘நித்தம் ஒரு வானம்’ என்ற படத்தை எழுதி இயக்கியிருந்த ரா.கார்த்திக் இந்த படத்தை 2 மொழி களில் எழுதி இயக்கஇருக்கிறார். இதில் நாகார்ஜூனாவின் நெருங்கிய தோழியும், முன்னணி நடிகைகளில் ஒருவருமான தபு முக்கிய வேடம்ஒன்றில் நடிக்கிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் இதை உறுதி செய்துள்ள நாகார்ஜூனா கூறும்போது, ‘நானும், தபுவும் இரு படங்களில் நடித்திருந்தோம். 28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நாங்கள் இணைந்துள்ளோம். 100வது படத்தில் நடிக்கும் தகவலை அறிந்த தபு, ‘இதில் நிச்சயமாக நானும் இடம்பெற வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார். அவரது அன்பான கோரிக்கையை என்னால் மீறவே முடியவில்லை’ என்றார்.

 

Tags : Tabu ,Nagarjuna ,Hyderabad ,Nagar Juna ,King 100 ,Ra ,Kartik ,
× RELATED கல்யாணியை காப்பியடித்த அமலா பால்