×

25 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீசாகும் மின்னலே

 

சென்னை: சிடிவி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முரளி மனோகர் தயாரிக்க, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குனராக அறிமுகமான படம், ‘மின்னலே’. மாதவன் ஜோடியாக ரீமாசென் நடித்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்தார். இதில் தாமரை எழுதி பாம்பே ஜெய பாடிய ‘வசீகரா…’ என்ற பாடல் இன்றளவும் ரசிர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு, வரும் 13ம் தேதி தமிழகம் முழுவதும் ரீ-ரிலீசாகிறது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார். ‘அலைபாயுதே’ வெற்றிக்கு பிறகு மாதவன் நடித்திருந்த இந்த படத்தில் அப்பாஸ், விவேக் நடித்திருந்தனர்.

Tags : Chennai ,Murali Manohar ,CTV Entertainment ,Gautham Vasudev Menon ,Madhavan ,Reema Sen. Harris Jayaraj ,Thamarai ,Bombay Jaya ,Tamil Nadu ,Valentine's Day ,Rahul ,Romeo Pictures ,
× RELATED கல்யாணியை காப்பியடித்த அமலா பால்