×

கல்யாணியை காப்பியடித்த அமலா பால்

கடந்த ஆண்டு டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வெளியான படம், ‘லோகா சாப்டர் 1: சந்திரா’. இதில் டிராகுலா என்கிற ரத்தக்காட்டேரி வேடத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்தார். இந்தியாவின் முதல் சூப்பர் வுமன் கதையுடன் உருவான இப்படம், அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. வசூலிலும் மகத்தான சாதனை படைத்தது. தற்போது கல்யாணி பிரியதர்ஷனை காப்பியடித்துள்ள அமலா பால், டிராகுலா ஜானர் படத்தில் நடித்து வருகிறார்.

சம்ஜத் இயக்கும் ‘ஹாஃப்’ என்ற மலையாள படத்தில் ரஞ்சித் சஜீவ், அமலா பால் நடிக்கின்றனர். இந்த ஆண்டு இறுதியில் பல்வேறு மொழிகளில் படம் ரிலீசாகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, அதில், ‘வலி… அதன் எதிரியை நினைவில் கொள்கிறது. இரவு… அலறலை நினைவில் கொள்கிறது’ என்ற டேக்லைனை பதிவிட்டுள்ளது. அந்த போஸ்டரில் ரஞ்சித் சஜீவ், அமலா பால் இருவரும் டிராகுலா என்கிற ரத்தக்காட்டேரி வேடத்தில் காணப்படுகின்றனர்.

Tags : Amala Pal ,Kalyani ,Kalyani Priyadarshan ,Dominic Arun ,Dracula ,India ,Dracula Janar ,Samjad ,
× RELATED காதலர் தினத்தில் ‘காதல் நூலகம்’ லுக்