×

ஓரகடம் ஐடிஐயில் மாணவர்கள் சேர்க்கை நாளையுடன் முடிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக துவங்கியுள்ள ஒரகடம் (சிப்காட் தொழிற்பூங்கா) அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் 100% சேர்க்கை மேற்கொள்ளும் பொருட்டு நாளை இரவு 11.59 வரை இணையதளம் மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதில் சேர விரும்பும் மாணவர்கள் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், ஒரகடம், சேர்க்கை உதவி மையத்தினை அணுகவும். 1. கம்மியர் மோட்டார் வாகனம். 2. குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பவியலாளர், 3. கம்மியர் மின்னணுவியல், 4. இயந்திரம் மற்றும் மின்னணுவியல் தொழில்நுட்பவியலாளர்  ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு 2 ஆண்டுகால பயிற்சிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும். வெல்டர் பிரிவுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில் பயிற்சி கட்டணம் ஏதுமில்லை. மேலும் விவரங்களுக்கு முதல்வர். அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஓரகடம் என்ற முகவரியிலும், 9499937448, 6379090205 என்ற செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்….

The post ஓரகடம் ஐடிஐயில் மாணவர்கள் சேர்க்கை நாளையுடன் முடிவு appeared first on Dinakaran.

Tags : IDI ,Kanchipuram ,Oorakadam ,Chipkat ,Worrpoonka ,Rasinar Vocational Training Centre ,Kanchipuram District ,IDI Students Admission Day ,
× RELATED கந்தர்வகோட்டையில் நடப்பு கல்வியாண்டிலேயே ஐடிஐ திறக்க வேண்டும்