‘காதல் புனிதமானது, மென்மையானது, கவிதை போன்றது என்று சொல்வார்கள். ஆனால், காதல் என்பது நூலகம் போன்றது. அதிலுள்ள புத்தகங்கள் அனைத்தையும் படித்தவர் யாரும் இல்லை’ என்று சொல்கிறார், ‘காதல் நூலகம்’ என்ற படத்தின் இயக்குனர் பி.எஸ்.செல்வராஜ். இப்படத்தை திவ்யதர்ஷினி புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.ஆர்.ராஜமனோகரன் தயாரித்துள்ளார். இதற்கு முன்பு ‘மலரினும் மெல்லிய’ என்ற படத்தை இயக்கி தமிழ்நாடு அரசு விருது பெற்றுள்ள பி.எஸ்.செல்வராஜ், நீண்ட இடைவெளிக்கு பிறகு அதே தயாரிப்பாளருடன் இணைந்து 2வது படத்தை இயக்கியுள்ளார்.
தற்ேபாது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் ஹீரோவாக சிவா, ஹீரோயினாக ஐரா அகர்வால் நடித்துள்ளனர். மற்றும் ஜாவா சுந்தரேசன், கூல் சுரேஷ், டிஎஸ்ஆர் நடித்திருக்கின்றனர். காதலிக்காத மனிதன் யாரும் இல்லை. காதலிக்கவில்லை என்றால், அவன் மனிதனே இல்லை என்ற கருத்தை சொல்லும் இப்படத்துக்கு வெங்கி தர்ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிருத்வி இசையில் கவிதைப்பித்தன், விவேகா, சீர்காழி சிற்பி, நவநீத ரமேசு ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். சசிகுமார் எடிட்டிங் செய்துள்ளார். வரும் 14ம் தேதி காதலர் தினத்தில் ‘காதல் நூலகம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது.
