ஐதராபாத்: ராம்சரண், உபாசனா தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இப்போது இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இதில் ஒரு ஆண் குழந்தை, மற்றொன்று பெண் குழுந்தை. இந்நிலையில் சிரஞ்சீவியை நெட்டிசன்கள் சிலர் கடுமையாக விமர்சிக்கிறார்கள். 5 பேத்திகள் இருப்பதால் தன் வீட்டில் ஆண் வாரிசு இல்லாமல் அது மகளிர் விடுதி மாதிரி இருப்பதாக சிரஞ்சீவி சமீபத்தில் விளையாட்டாக தெரிவித்ததை மனதில் வைத்து தான் தற்போது விளாசுகிறார்கள்.
‘‘லெகசியை தொடர பேரன் வேண்டும் என்று அவர் கேட்ட நிலையில் ஆண் வாரிசு பிறந்திருக்கிறது. பேரன் பிறந்திருப்பதால் சிரஞ்சீவி முகத்தில் அப்படியொரு சந்தோஷம். இந்த காலத்தில் ஆண் பிள்ளை என்ன, பெண் பிள்ளை என்ன?. எல்லாம் ஒன்று தான். இதை சிரஞ்சீவி போன்ற ஆட்கள் எப்பொழுது தான் உணர்வார்களோ?. ஒரு ஆண் வாரிசு பிறந்ததில் இரண்டு வாரிசுகளை மறந்துவிட்டார்’’ என்று சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்தார்கள்.
அந்த டிவிட்டை பார்த்துவிட்டு சிரஞ்சீவியின் தம்பி நாக பாபுவின் மருமகளும், நடிகையுமான லாவண்யா திரிபாதி எக்ஸ் தளத்தில் கூறியதாவது: நான் வழக்கமாக இது போன்ற டிவிட்களை கண்டுகொள்வது இல்லை. ஆனால் உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை. இந்த டிவிட் ரொம்ப மோசம். சந்தோஷமான தருணத்தை மோசமானதாக மாற்றிவிட்டது.
அவர் தன் குடும்பத்து பெண்களை அதிலும் குறிப்பாக பேத்திகளை எப்படி நடத்துவார் என்பது உங்களுக்கு தெரியாது. அவர் செய்வதில் ஒரு சில ஆண்கள் அதுவும் ஒரு சதவீதம் மட்டுமே செய்வார்கள். அதனால் தெரியாதவர்கள் பற்றி கமெண்ட் செய்யாமல் இருப்பதே நல்லது என்றார். லாவண்யா திரிபாதி கோபமாக போட்ட டிவிட் வைரலாகவே, சிரஞ்சீவியை விமர்சித்து டிவிட் போட்டவர் அதை நீக்கிவிட்டார்

