×

நடிப்புக்கு முழுக்கு போடும் ஸ்ரீலீலா

தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘பராசக்தி’ என்ற படத்தில் நடித்த ஸ்ரீலீலா, தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். தவிர, இந்தியில் கார்த்திக் ஆர்யனுடன் ஒரு படம், அனுராக் பாசு இயக்கும் புதிய படம் என்று பிசியாக இருக்கிறார். தெலுங்கு மற்றும் கன்னட படவுலகில் முன்னணி நடிகையாக பிரபலமாகியுள்ளார். சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘உஸ்தாத் பகத் சிங்’ என்ற படத்தில் பவன் கல்யாண் ஜோடியாக நடித்து கவனத்தை ஈர்த்திருந்தார்.

இந்நிலையில், நடிப்பை தாண்டி மற்றொரு துறையில் ஈடுபட முடிவு செய்துள்ளார். நடிக்க வருபவர்கள், பேஷன் உலகில் சில காலம் பணியாற்றிய பிறகு வருவார்கள். அதில் கிடைக்கும் அனுபவம் அவர்களுக்கு திரைத்துறையில் பேருதவியாக இருக்கும். ஸ்ரீலீலாவை பொறுத்தவரை, மருத்துவம் படிக்கும்போதே சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். தற்போது நடிப்பில் இருந்து சற்று ஒதுங்கி, பேஷன் துறைக்குள் நுழைய முடிவு செய்துள்ளார். அவர் கூறுகையில், ‘எனக்கென்று தனி ஸ்டைலை உருவாக்கி வருகிறேன். எதிர்காலத்தில் இளம் பெண்களுக்கான ஒரு பேஷன் ஐகானாக உருவெடுக்க பெரிதும் விரும்புகிறேன்’ என்றார்.

Tags : Srileela ,Sivakarthikeyan ,Rajkumar Periyasamy ,Dhanush ,Karthik Aryan ,Anurag Basu ,Pawan Kalyan ,
× RELATED தேர்தல் பின்னணியில் படம் எடுத்தது ஏன்? உமாபதி ராமய்யா விளக்கம்