×

17ம் தேதி ரிலீசாகும் ரூம் பாய்

சென்னை: ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்துள்ள படம், ‘ரூம் பாய்’. ஹீரோவாக சி.நிகில், ஹீரோயினாக ‘அரண்மனை 4’ ஹர்ஷா நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், ‘காத்து கருப்பு’ கலை, கற்பகம், கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, அருண்ராஜா, பிரபாகர், கேரளா பெஹமின் நடித்துள்ளனர். ஒரு பாடல் காட்சியில் மும்பை மாடல் நிதி மரோலி ஆடியுள்ளார்.

சி.பாரதி ராஜன் ஒளிப்பதிவு செய்ய, சூரியமூர்த்தி பாடல்கள் எழுதியுள்ளார். வேலன் சகாதேவன் இசை அமைக்க, டி.வி.மீனாட்சி சுந்தர் எடிட்டிங் செய்துள்ளார். தினா நடனப்பயிற்சி அளிக்க, கார்த்திக் வர்மன் சண்டைக்காட்சி அமைத்துள்ளார். தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவர் ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ளார்.

அவர் கூறுகையில், ‘2002ல் ‘தாத்தா’ என்ற குறும்படத்துக்காக, சிறந்த ஒலிப்பதிவுக்கான தமிழ்நாடு அரசு விருது பெற்றேன். 50க்கும் மேற்பட்ட ஆவணம், கார்ப்பரேட் மற்றும் விளம்பர படங்களை இயக்கினேன். ‘ரூம் பாய்’ என்ற படம், ஃபேமிலி சென்டிமெண்ட் கலந்த இன்வெஸ்டிகேஷன் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ளது. வரும் 17ம் தேதி படம் திரைக்கு வருகிறது’ என்றார்.

Tags : Chennai ,Suriyakala Chandramoorthy ,ACM Cinemas ,C. Nikhil ,Harsha ,Iman Annachi ,Birla Bose ,Kaathu Karuppu ,Kalai ,Karpagam ,Kavita Vijayan ,Sameer ,Chitti Raja ,Arunraja ,Prabhakar ,Kerala Behamin ,Mumbai ,Nidhi Maroli ,C. Bharathi Rajan ,Suriyamoorthy ,Velan Sahathevan ,
× RELATED பைக்கர் விமர்சனம்…