×

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதிலளித்ததை எதிர்த்து வழக்கு: ஒன்றிய அரசு பதில் தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஞானசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் புதுவையில் நியமன எம்எல்ஏக்கள் தொடர்பான தகவல்களை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் கேட்டேன். ஆனால் ஒன்றிய உள்துறை அமைச்சகம் நான் அனுப்பிய கேள்வி மனுவை திருப்பி அனுப்பியதுடன் இந்தியில் பதிலளித்தது. எனக்கு அந்த மொழி தெரியாது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே தெரியும். எனவே, இந்தியில் வழங்கிய பதிலை ரத்து செய்ய வேண்டும். எனக்கு தெரிந்த மொழியில் மட்டுமே பதில் அளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு ஆவணங்களை பார்த்த நீதிபதி, தனக்கும் இந்தி தெரியாது என்று தெரிவித்தார். மேலும் இதுகுறித்து ஒன்றிய அரசு வரும் 16ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டார்….

The post தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதிலளித்ததை எதிர்த்து வழக்கு: ஒன்றிய அரசு பதில் தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Chennai ,M. Gnanasekaran ,Union Government ,Dinakaran ,
× RELATED யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி