×

என் அழகு மீது எனக்கே சந்தேகம்: சொல்கிறார் டாப்ஸி

 

மும்பை: தமிழில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கும் டாப்ஸி, இந்தியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் கூறியது: சினிமாவுக்கு வந்த புதிதில் என் அழகு மீது எனக்கே சந்தேகம் இருந்தது. எனக்கெல்லாம் பட வாய்ப்பு கிடைக்குமா என்ற தாழ்வு மனப்பான்மையும் இருந்தது. முதல் பட வாய்ப்பு கிடைத்தபோது, அதையெல்லாம் தாண்டி ஒரு நம்பிக்கை பிறந்தது. இப்போது தமிழ், இந்தி, தெலுங்கில் பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்திருக்கிறேன். இது எல்லாமே எதிர்பாராமல் நடந்ததுதான்.

நடிப்பு என்பது கற்றுக்கொண்டே இருப்பதுதான். ஒவ்வொரு படம் மூலம் ஒவ்வொரு பாடம் கிடைக்கும். அதையும் கற்றுக்கொள்ள வேண்டும். நான் பயந்தபடி நடக்காதபோது, திருப்தி அடைந்துகொள்வதில் பலனில்ைல. அதையும் மீறி, பயத்துடன் நிறைய கற்க வேண்டும். அது யாரும் என்னிடம் சொன்னதில்லை. நானாகவே செய்திருக்கிறேன். தோல்வி ஏற்படும்போது, அது என் மீது சுமத்தினால் சரியாக இருக்காது. திரைப்படம் என்பது கூட்டு முயற்சிதான். இவ்வாறு டாப்ஸி கூறினார்.

Tags : Taapsee ,Mumbai ,
× RELATED தியேட்டரில் திடீரென்று உயிரிழந்த ரசிகர்