×

மருத்துவ உபகரணங்கள் கொள்ளை

ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் ஆண்டனிராஜ். சோமங்கலம் அடுத்த எருமையூர் பகுதியில், வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையை ஒட்டி மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர். இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு வேலை முடிந்ததும் ஊழியர்கள், தொழிற்சாலையை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை வழக்கம்போல் தொழிற்சாலைக்கு வந்தனர். அப்போது, தொழிற்சாலையின் பக்கத்தில் உள்ள இரும்பு ஷீட் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, தொழிற்சாலையில் இருந்த மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் அலுமினியத்தால் ஆன அச்சு, அலுமினிய துண்டுகள், துளையிடும் இயந்திரங்கள் என ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.தகவலறிந்து சோமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர்கள் சிலர் தொழிற்சாலையின் பக்கவாட்டில் உள்ள சிசிடிவி கேமராவை தலைக்கீழாக திருப்பி வைத்துவிட்டு, கொள்ளை அடித்து  சென்றது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்….

The post மருத்துவ உபகரணங்கள் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Antoniraj ,Kuduvancheri ,Tambaram ,Somangalam ,Erumayur ,Vandalur ,Meenjoor ,Dinakaran ,
× RELATED அழுகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு