×

ஜூனியர் என்டிஆருக்கு வில்லனாகும் சைப் அலிகான்

ஐதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர். ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகி இருக்கிறார். இதனால், இவர் அடுத்து நடிக்கும் படங்கள் பான் இந்தியா முறையில் உருவாகிறது. இவர் நடிக்கும் அடுத்த படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். ஜூனியர் என்டிஆரின் 30வது படமான இதில், ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்தில் பிரபல இந்தி நடிகர் சைப் அலிகான் வில்லனாக நடிக்க இருக்கிறார். வரும் 30ம் தேதி இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. இதற்காக சாபு சிரீல், பிரமாண்ட அரங்கம் அமைத்துள்ளார். ஏற்கனவே ஆதிபுருஷ் படத்தில் பிரபாசுக்கு வில்லனாக சைப் அலிகான் நடித்து வருகிறார். அதில், பிரபாஸ் ராமராகவும் சைப் அலிகான் ராவணனாகவும் நடிக்கிறார்கள்.

Tags : Saip Ali Khan ,Jr. ,NTR ,
× RELATED ஹேக் செய்து விடுவார்கள்; தேர்தல்களில்...