×

உயர் மின் அழுத்த கம்பத்தில் மின் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

ஆலந்தூர்: உள்ளகரம் கருணாநிதி நகர், பாரதி தெருவை சேர்ந்தவர் கோதண்டராமன் (46). இவருக்கு ஷகிலா என்ற மனைவி. இரண்டு மகள்கள் உள்ளனர். கிண்டி ராஜ்பவன் மின்வாரிய அலுவலகத்தில் ஒயர்மேனாக பணியாற்றி வந்தார். இவர் திடீரென நங்கநல்லூரர் 100 அடி சாலையில் உள்ள உயர் மின் அழுத்த கம்பத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பழவந்தாங்கல் காவல்நிலைய எஸ்ஐ பாலு, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். விசாரணையில், கோதண்டராமன் குடிப்பழக்கம் உடையவர். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் மனைவியிடம் அடிக்கடி குடிப்பதற்கு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அதேபோல் நேற்று மாலையும் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். மனைவி பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனையடுத்து சண்டை போட்டுவிட்டு வெளியே சென்ற கோதண்டராமன், மின்கம்பத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரிக்கின்றனர்….

The post உயர் மின் அழுத்த கம்பத்தில் மின் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Alandur ,Kutkaram Karunanidhi Nagar ,Bharati Street ,Gothandaraman ,Shakila ,
× RELATED ஓடும் காரில் தீவிபத்து