×

அருள்நிதி, துஷாரா விஜயன் நடிக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’

சென்னை: ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் வழங்க, ‘ராட்சசி’ படத்தின் இயக்குனர் சை.கவுதம ராஜ் இயக்கத்தில் அருள்நிதி, துஷாரா விஜயன் நடிக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ என்ற படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வித்தியாசமான கதைகள் மற்றும் கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதி, தற்போது இப்படத்தில் மிகவும் வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் வெற்றிபெற்ற ‘டாடா’ படத்தை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ என்ற படம் குறித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சார்பட்டா பரம்பரை’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த துஷாரா விஜயன் ஹீரோயினாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஷ்காந்த்,  சரத் லோகித்தஸ்வா, ராஜசிம்மன், ‘யார்’ கண்ணன் நடித்துள்ளனர். தர் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைத்துள்ளார். யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார்.  ராமநாதபுரம், சிவகங்கை, ராமேஸ்வரம், விருதுநகர் ஆகிய பகுதிகளில்
படப்பிடிப்பு நடந்துள் ளது.

Tags : Arulnidhi ,Tushara Vijayan ,Moorgan ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி