×

ஓடிடியில் பதான் ரிலீஸ்

மும்பை: சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடிப்பில் வெளியான பான் இந்தியா படம், ‘பதான்’. இந்தப் படம் கடந்த ஜனவரி 25ம் தேதி இந்தியா முழுவதும் உள்ள 8,000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்புகளையும், கண்டனத்தையும் தாண்டி வெளியான இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தியாவில் ரூ.629 கோடி, வெளிநாடுகளில் ரூ.380 கோடி என்று, மொத்தம் ரூ.1,009 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்தப் படம் வரும் ஏப்ரல் 26ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாகிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Pathan ,
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...