ஜவான் சண்டைக் காட்சி லீக் ஷாருக்கான், அட்லி ஷாக்

மும்பை: அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் இந்தி படம் ‘ஜவான்’. இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க ராம் சரணிடம் பேசியுள்ளனர். அவர் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சி சமூக வலைதளத்தில் கசிந்துள்ளது. அதில் ஷாருக்கான் தகடு பெல்டால், வில்லன்களை அடிப்பது போன்ற சில நொடிகள் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்தக் காட்சி இணையதளத்தில் வைரலாகி வருவதால் ஷாருக்கான் தரப்பும் இயக்குநர் அட்லீயும் அதிர்ச்சியடைந்துள்ளனர்..

Related Stories: