×

நடிகை பவித்ராவை 4வது திருமணம் செய்த நடிகர்

ஐதராபாத், மார்ச் 11: தெலுங்கு நடிகர் நரேஷ் பாபு நான்காவது முறையாக திருமணம் செய்து கொண்டார். தனது நீண்ட நாள் தோழியான நடிகை பவித்ரா லோகேஷை அவர் மணந்தார். நரேஷ் ஏற்கனவே மூன்று முறை திருமணம் ஆனவர். அவரது முதல் திருமணம் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீனுவின் மகளுடன் நடந்தது. இந்த தம்பதிக்கு நவீன் விஜய்கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். நரேஷ் பின்னர் பிரபல கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான தேவுலபள்ளி கிருஷ்ண சாஸ்திரியின் பேத்தி ரேகா சுப்ரியாவை மணந்தார். பிறகு அவரை பிரிந்தார். பிறகு அவர் தன்னை விட 20 வயது இளையவரான ரம்யா ரகுபதியை மணந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்திருக்கும் பவித்ராவுக்கு இது இரண்டாவது திருமணம். அவர் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டார். பவித்ராவுடனான நரேஷின் உறவுக்கு நரேஷின் 3வது மனைவி ரம்யா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். நரேஷும் பவித்ராவும் ஓட்டல் அறையில் தங்கியிருந்தபோது அங்கு சென்ற ரம்யா, ரகளையில் ஈடுபட்டார். இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்று, நரேஷ் பவித்ராவுடன் தங்கள் உறவை உறுதிப்படுத்தும் வீடியோவைப் பகிர்ந்தார். இதற்கிடையில் திடீரென இவர்கள் நேற்று திருமணம் செய்துகொண்டனர்.

Tags : Pavitra ,
× RELATED கொலை வழக்கு; நடிகர் தர்ஷனுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்!