×

நக்மாவிடம் ரூ.1 லட்சம் ஆன்லைன் மோசடி

மும்பை, மார்ச் 9: நடிகை நக்மாவிடம் ஆன்லைன் மூலம் ரூ.1 லட்சம் மோசடி செய்யப்பட்டது. நக்மா, தற்போது மும்பையில் வசிக்கிறார். அவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் இடம்பெற்ற லிங்க்கிற்கு அவர் சென்றார். அப்போது எதிர்முனையிலிருந்து ஒருவர் போன் செய்து, உங்கள் வங்கியிலிருந்து பேசுவதாக கூறினான். பிறகு நக்மாவிடமிருந்து பல்வேறு வங்கி தகவல்களை பெற்றுள்ளான். அதன் பிறகு ஓடிபி எண்ணை கூறும்படி தெரிவித்துள்ளான்.

இது எல்லாவற்றையும் நக்மா செய்திருக்கிறார். இதையடுத்து அந்த நபர், தொடர்பை துண்டித்துவிட்டான். சிறிது நேரத்தில் நக்மாவின் வங்கி கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் பறிபோனது தெரிந்தது. இதையடுத்து நக்மா அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். நக்மா கூறும்போது, ‘ஆர்வ மிகுதியால் செல்போனுக்கு வந்த லிங்க்கில் தொடர்புகொண்டேன். போனில் பேசிய நபர், 20 நடைமுறைகளை பூர்த்தி செய்ய சொன்னார். எல்லாம் செய்து ஏமாறிவிட்டேன். நல்ல வேளை பெரிய தொகை எதுவும் திருட்டு போகவில்லை’ என்றார்.

Tags : Nagma ,
× RELATED எனக்கு தகுதி இல்லையா? காங்கிரசுக்கு...