×

நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் வெற்றி: பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து

நேபாளத்தில் அரசியல் குழப்பங்களுக்கு இடையே உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 12ம் தேதி ஷேர் பகதூர் தேபாவை பிரதமராக அதிபர் பித்யா தேவி பண்டாரி நியமனம் செய்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தேபா மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 265 உறுப்பினர்களில் 165 உறுப்பினர்கள் தேபாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் தேபா  வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.அவருக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில்,”பிரதமர் ஷேர் பகதூர் தேபாவிற்கு வாழ்த்துக்கள். ஆழமாக வேரூன்றிய இரு நாட்டு மக்களிடையேயான நமது தனித்துவமான கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவதற்காக அனைத்து துறைகளிலும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்நோக்கி இருக்கின்றேன்” என வாழ்த்து கூறி உள்ளார். இதற்கு நேபாள பிரதமர் ஷேர் பதூர் தேபா நன்றி தெரிவித்துள்ளார்….

The post நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் வெற்றி: பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Nepal ,PM ,Modi ,Twitter ,President ,Sher Bahadur Deba ,Supreme Court ,
× RELATED சீர்திருத்தத்தின் திசையை நோக்கி...