×

நண்பர்களை இழக்காதீங்க: செல்வராகவன் அட்வைஸ்

சென்னை: நல்ல நண்பர்களை இழந்து விடாதீர்கள் என ரசிகர்களுக்கு இயக்குனர் செல்வராகவன் அறிவுரை கூறினார். காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், என்ஜிகே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் செல்வராகவன். பீஸ்ட், சாணிக்காயிதம், பகாசூரன் படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் நண்பர்களை பற்றி டிவிட்டரில் அவர் கூறியிருப்பது: அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாக வேலையைத் தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாக இருப்பவர்களைப் பார்த்தால் பொறாமையாக உள்ளது. எங்கு போய் நட்பைத் தேடுவேன். இவ்வாறு செல்வராகவன் கூறியுள்ளார்.

Tags : Selvaraghavan ,
× RELATED வைகோ மீதான வழக்கு 4 மாதத்தில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு