×

சுஷ்மிதா சென்னுக்கு திடீர் மாரடைப்பு

மும்பை: நடிகையும் முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென்னுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. தமிழில், முதல்வன் படத்தில் ஷக்க லக்க பேபி பாடலுக்கு டான்ஸ் ஆடியவர் சுஷ்மிதா சென். இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார். உலக அழகி பட்டமும் வென்றவர். இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. கடந்த ஆண்டு தனது காதலரை பிரிந்தார். பண மோசடியில் ஈடுபட்டு, லண்டனில் பதுங்கியுள்ள லலித் மோடியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இவர் வெளியிட்டிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சுஷ்மிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் ஆஞ்சியோ செய்துகொண்டு திரும்பியுள்ளார். இந்த தகவலை அவரே வெளியிட்டுள்ளார். சுஷ்மிதாவுக்கு மது பழக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Sushmita Sen ,
× RELATED சுஷ்மிதா சென் – ரோஹ்மன் பிரிந்த...