மும்பை: சிறந்த நடனக்கலைஞராகவும், விபத்தில் ஒரு காலை இழந்தாலும், அதிக தன்னம்பிக்கையுடன் சாதித்து வருபவருமான பிரபல நடிகை சுதா சந்திரன், ‘நாகின்’ உள்பட ஏராளமான டி.வி தொடர்களில் நடித்துள்ளார். பல்வேறு மொழிகளில் நூற்றுக்கணக்கனான படங்களில் நடித்துள்ள அவர், மும்பையிலுள்ள தன்னுடைய வீட்டில் ‘மாதா கி சவுகி’ என்ற சிறப்பு பூஜையை நடத்தினார். சிவப்பு மற்றும் வெள்ளை நிற சேலை அணிந்து, தலையில் பட்டை கட்டியிருந்த சுதா சந்திரன் பூஜையில் பங்கேற்றார். அப்போது பக்தி பாடல்கள் ஒலித்தது. அதைக்கேட்டு பரவசம் அடைந்த சுதா சந்திரன் சாமியாட தொடங்கினார். ஒருகட்டத்தில் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் கத்திய அவர், அருகில் இருந்த உறவினர் ஒருவரின் கையை ஆக்ரோஷத்துடன் கடிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுதா சுந்திரனின் கணவர் ரவி டாங், சக நடிகை ஜஸ்வீர் கவுர் உள்பட ஐந்து பேர், சுதா சந்திரனை தாங்கிப்
பிடித்து, அவர் கீழே விழுந்து விடாமல் தடுத்தார்கள். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங் களில் வெளியாகி, கடும் விவாதத்தை கிளப்பி இருக் கிறது.
