×

சயின்ஸ்பிக்‌ஷன் சர்வைவல் திரில்லரில் ஆண்ட்ரியா

ஜம்போ சினிமாஸ் சார்பில் ஏ.ஸ்ரீதர் தயாரிக்க, ஆர்.அழகு கார்த்திக் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்த சயின்ஸ்பிக்‌ஷன் சர்வைவல் திரில்லர் படம், ‘நோ என்ட்ரி’. இந்திய ராணுவத்துக்காக அடர்ந்த காட்டுக்குள் ஆய்வு மேற்கொள்ளும் ஆண்ட்ரியா, அங்கு தனது தந்தையைத் தேடுகிறார். அதுபோல் வெவ்வேறு காரணங்களுக்காக காட்டுக்குள் சிலர் வருகின்றனர்.

அங்கு மரபணு மாற்றப்பட்ட, அதிக சக்தி வாய்ந்த, ஒருவராலும் அழிக்க முடியாத நாய்களிடம் அவர்கள் சிக்குகின்றனர். நாய்களின் தீவிர வேட்டையில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா? அவர்கள் வந்த நோக்கம் நிறைவேறியதா என்பது கதை. ஆண்ட்ரியா, பிரதாப் போத்தன், ‘வாகா’ ரன்யா ராவ், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

உலகிலேயே அதிக மழை பெய்யும் மேகாலயாவில் இருக்கும் சிரபுஞ்சி காடுகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.  பயிற்சி அளிக்கப்பட்ட உயர் ரக நாய்கள் நடித்தன. ரமேஷ் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜேஷ் அசோக் இசை அமைத்துள்ளார்.

Tags : Andrea ,
× RELATED மிஷ்கின் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கும் விஜய் சேதுபதி